வாரிசு திரைப்படத்தின் தீ தளபதி பாடல் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக பல இடங்களில் மாஸ் காட்டி வருகிறது. இதனால் இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் அண்மையில் கேக் வெட்டி செலிப்ரேட் செய்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இணையதளத்தில் மாஸ் காட்டும் வாரிசு பாடல்!!… படக்குழு பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் அப்டேட் வைரல்.!

இந்நிலையில் இப்படத்தில் தமன் இசையில் உருவாகி இருந்த தீ தளபதி பாடல் குறித்து சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், பேரைக் கேட்டாலே கூஸ் பம்ஸ் தான் என போஸ்டருடன் பதிவிட்டு இப்பாடல் இணையதளத்தில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதாக புதிய தகவலை படக்குழு தெரிவித்துள்ளது. இதனை #TheeThalapathy என்ற ஹேஷ்டேக்குடன் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.