புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வாரிசு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வரும் பொங்கலுக்கு வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வம்சி இயக்க தமன் இசையமைத்துள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உட்பட பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி சென்னையில் கோலாகலமா நடைபெற்றது.

அதன் பிறகு தமன் இசையில் உருவாகி இருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில் ஜனவரி 1ஆம் தேதி அன்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வாரிசு படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.