வாரிசு திரைப்படத்தின் புதிய போஸ்டரை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் அப்போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.

ரசிகர்களால் அன்போடு இளையதளபதி என்று அழைக்கப்பட்டு வருபவர் தான் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜயுடன் இணைந்து நடிகை ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, சங்கீதா, பிரபு, சரத்குமார், ஷாம் உள்ளிட்ட பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்து வருகின்றனர். தமன் இசையில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது.

மாஸ் லுக்கில் இருக்கும் விஜய்!!… தீயாகப் பரவும் வாரிசு படத்தின் புதிய போஸ்டர்!.

இந்நிலையில் இப்படம் குறித்த அறிவிப்புகளை ரசிகர்கள் எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டே இருந்த நிலையில் தற்போது ரசிகர்களின் ஆசைப்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு இருக்கிறது. அப்போஸ்டரில் கருப்பு நிற உடையில் மாஸான லுக்கில் இருக்கும் விஜயை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ரசித்து இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.