வாரிசு படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வம்சி இயக்கத்தில் அடுத்ததாக வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் வாரிசு.

சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், யோகி பாபு, ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது தொடர்ந்து ட்ரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ட்ரெய்லரை வைத்துப் பார்க்கையில் சரத்குமார் தனது மூன்று மகன்களான ஸ்ரீகாந்த் ஷாம் மற்றும் தளபதி விஜய் உள்ளிட்டோருடன் வாழ்ந்து வருகிறார். தொழிலதிபரான சரத்குமாருக்கு பிரகாஷ்ராஜ் எதிரியாக உருவாக குடும்பம் உடைகிறது.

இப்படியான நிலையில் இதுவரை ஊர் சுற்றும் வாலிபனாக இருந்து வந்த விஜய் பிரகாஷ்ராஜை எதிர்த்து கொடுத்து தன்னுடைய கம்பெனியை நிலை நிறுத்தி உடைந்து போன தன்னுடைய குடும்பத்தை எப்படி ஒன்று சேர்க்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என தெரியவந்துள்ளது.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.