நடிகர் விஜயின் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, நடிகர் ஷாம், குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா என பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தினை வம்சி இயக்கியுள்ளார். தமன் இசையில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

வாரிசு… ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!!… காரணம் என்ன தெரியுமா?? முழு விவரம் இதோ!.

ஆனால் தற்போது ஆந்திரா, தெலுங்கானாவில் படக்குழு திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகாமல் தள்ளி போனதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என டோலிவுட் தயாரிப்பாளர்கள் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதனால் டோலிவுட்டில் மட்டும் வாரிசு திரைப்படம் குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.