வாரிசு திரைப்படத்தின் பேனர்களை வைத்துள்ள பிரபல திரையரங்குகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது. தமன் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் அண்மையில் வெளியாகி இணையதளத்தில் சூப்பர் ஹிட் அடித்து வரும் நிலையில் அடுத்த அடுத்த அப்டேட் களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் வாரிசு படத்தின் பிரமோஷன் பணிகள் கோலாகலமாக தொடங்கியுள்ளது. அதாவது சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் வாரிசு பொங்கல் ரிலீஸ் என பெரிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வாரிசு பிரமோஷன் ஸ்டார்ட் என ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.