வாரிசு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு பகிர்ந்துள்ளது.

ரசிகர்களால் அன்போடு இளைய தளபதி என்று கொண்டாடப்படும் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் காஷ்மீரில் தீவிரமாக உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரும் ஆயுத பூஜைக்கு வெளியாக இருக்கும் இப்படத்தின் ஒரு சில அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் ரசிகர்களால் ட்ரெண்டிங் ஆகி வரும் நிலையில் தளபதி விஜயின் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வாரிசு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து படக்குழு பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

அதாவது, வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் ஃபேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படமாக கடந்த மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படம் உலக அளவில் 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்து சக்க போடு போட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து ஸ்பெஷல் போஸ்டருடன் படக்குழு வெளியிட்ட தகவல் இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. அதன்படி வாரிசு திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வருகின்ற பிப்ரவரி 22ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரவபூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த தகவல் தற்போது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.