பாடல்கள் குறித்து வாரிசு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

பாடல்கள் குறித்து வெளியான வாரிசு படத்தின் புதிய போஸ்டர்!!… உற்சாகத்தில் ரசிகர்கள்.!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் தமன் இசையில் உருவாகி இருந்த 3 பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதியான நாளை மாலை 4 மணிக்கு சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் வாரிசு படக்குழு மற்றும் பல முன்னணி திரை பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

பாடல்கள் குறித்து வெளியான வாரிசு படத்தின் புதிய போஸ்டர்!!… உற்சாகத்தில் ரசிகர்கள்.!

இந்நிலையில் வாரிசு படக்குழு இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதில் ஆடியோ லான்ச் நடைபெறும் அதே நாளான டிசம்பர் 24ஆம் தேதியான நாளை மாலை 4 மணிக்கு பாடல்கள் வெளியாகும் என்ற புதிய தகவலை அப்போஸ்டர் மூலம் தெரிவித்துள்ளது. வாரிசு படத்தின் அனைத்து பாடல்களையும் கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உற்சாகத்தில் இந்த போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.