நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலின் ப்ரோமோ இன்று மாலை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரை உலகில் இளைய தளபதி ஆக வளம் வருபவர் தான் விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், யோகி பாபு, குஷ்பூ, பிரபு, சங்கீதா, ஷாம், ஸ்ரீகாந்த் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வாரிசு பர்ஸ்ட் சிங்கள் வெளியீடு… பட்டைய கிளப்பும் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!… உற்சாகத்தில் ரசிகர்கள்!.

தில்ராஜ் தயாரிப்பில் தமன் இசையில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாடல் இந்த வாரத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது இப்பாடலுக்கான ப்ரோமோ வெளியீட்டு நேரம் குறித்து அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

வாரிசு பர்ஸ்ட் சிங்கள் வெளியீடு… பட்டைய கிளப்பும் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!… உற்சாகத்தில் ரசிகர்கள்!.

அதன்படி விஜயின் வாரிசு திரைப்படத்தில் விஜய் குரலில் உருவாகி இருக்கும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கான ப்ரோமோவை நவம்பர் 3ஆம் தேதியான இன்று மாலை 6:30 மணி அளவில் வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த தகவலால் உற்சாகமடைந்த விஜய் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இதனை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.