வாரிசு திரைப்படம் பல்வேறு இடங்களில் தோல்வியை தழுவி இருப்பதாக தெரியவந்துள்ளது.

Varisu Movie Failure Area List : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று 250 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து வருகிறது.

வசூல் அதிகமாக இருந்தாலும் படம் பல்வேறு இடங்களில் தோல்வியை தழுவி இருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா ஆஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களில் படத்திற்கு எதிர்பார்த்த அளவில் வசூல் இல்லை என தெரியவந்துள்ளது.

அதேபோல் தெலுகுவில் இந்த படம் நல்ல வசூலை பெறும் என எதிர்பார்ப்போடு இருந்த தயாரிப்பாளருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதேபோல் தமிழகத்திலும் இந்த படம் இன்னும் லாபக் கணக்கில் சேரவில்லை என சொல்லப்படுகிறது.

இன்றைய வசூலை பொறுத்தே படம் லாபத்தை பெறுமா? இல்லையா? என்று தெரியவரும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.