விஜயின் வாரிசு திரைப்படம் எந்த பாணியில் உருவாகி இருக்கிறது என்று ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு இயக்குனர் வம்சி கொடுத்த பதில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களால் அன்போடு இளையதளபதி என்று அழைக்கப்பட்டு வருபவர் தான் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜயுடன் இணைந்து நடிகை ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, சங்கீதா, பிரபு, சரத்குமார், ஷாம் உள்ளிட்ட பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்து வருகின்றனர். தமன் இசையில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் வாரிசு திரைப்படம் குறித்து ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு இயக்குனர் அளித்திருக்கும் பதில் வைரலாகி வருகிறது. அதாவது, தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் தெலுங்கு பட பாணியில் இருக்குமா? இல்லை தமிழ் பட பாணியில் இருக்குமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு “வாரிசு திரைப்படம் ஒரு பக்கா தமிழ் படமாக இருக்கும்” என்று இப்படத்தின் இயக்குனரான வம்சி படைப்பள்ளி அளித்திருக்கும் பதில் வைரலாகி வருகிறது.