நடிகை குஷ்பூ வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நடிகர் பிரபு மற்றும் சரத்குமார் உடன் இணைந்து புகைப்படம் எடுத்து பகிர்ந்து இருக்கிறார். அது தற்பொழுது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் இளைய தளபதி ஆக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்பொழுது வம்சிபடைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், யோகி பாபு, ஷியாம், பிரபு, குஷ்பு, ஸ்ரீகாந்த், சங்கீதா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

குஷ்பூ வெளியிட்ட வாரிசு ஷூட்டிங் ஸ்பாட் கிளிக் ட்ரெண்டிங்!!.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகப்பட்டு வரும் இப்படம் அடுத்த வருட பொங்கல் பண்டிகைக்கு திரையரங்கில் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக சமீபத்தில் படக்குழு தெரிவித்திருந்தது.

குஷ்பூ வெளியிட்ட வாரிசு ஷூட்டிங் ஸ்பாட் கிளிக் ட்ரெண்டிங்!!.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகை ராஷ்மிகா மந்தனா, தளபதி விஜயுடன் இணைந்து க்யூட்டாக ஒரு செல்ஃபி புகைப்படம் எடுத்துள்ளார். அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது தொடர்ந்து தற்பொழுது நடிகை குஷ்பூ வாரிசு படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் சின்னத்தம்பி பிரபு மற்றும் நாட்டாமை சரத்குமாருடன் இணைந்து சூப்பராக புகைப்படங்கள் எடுத்துள்ளார். அதனை குஷ்பூ தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.