வாரிசு ஜிமிக்கி பொண்ணு பாடலின் எடிட்டிங் வீடியோ வைரல்.

தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், யோகி பாபு, குஷ்பூ, பிரபு, சங்கீதா, ஷாம் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தில் தமன் இசையில் ஏற்கனவே வெளியாகி இருந்த மூன்று பாடல்கள் இணையதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வாரிசு படத்தின் மீதமுள்ள ஜிமிக்கி பொண்ணு மற்றும் வா தலைவா ஆகிய இரண்டு பாடல்கள் வெளியானது. இதில் ஜிமிக்கி பொண்ணு என்னும் பாடல் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்துள்ள நிலையில் ரசிகர்கள் அப்பாடலை விஜய்யின் மற்ற பாடல்களுடன் இணைத்து எடிட் செய்து வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

https://twitter.com/TYM__2__LEAD/status/1607404308450127873?t=xXMJgC6foYahWI5Pw7jXPw&s=19