நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்திய திரை உலகில் ரசிகர்களால் அன்போடு தளபதி என்று அழைக்கப்பட்டு வரும் நடிகர் தான் தளபதி விஜய். மாபெரும் ரசிகர் கூட்டத்தை பெற்ற இவர் தற்பொழுது வம்சி இயக்கிக் கொண்டிருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க பிரபு, சரத்குமார், யோகி பாபு, ஸ்ரீகாந்த், சங்கீதா, ஷாம், குஷ்பூ என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

வாரிசு… இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?? - வெளியான சூப்பர் தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டம்!.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள எண்ணூரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தின் இசையமைக்கும் பணிகளும் முன்புறமாக நடைபெற்று வருவதாக இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார். இந்த புதிய தகவல்லால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.