வாரிசு இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் நேரு விளையாட்டு அரங்கம் பரபரப்பாக தயாராகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் தமன் இசையில் உருவாகி இருந்த 3 பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

பரபரப்பாக தயாராகி வரும் நேரு ஸ்டேடியம்… வாரிசு ஆடியோ லாஞ்சுக்கான லேட்டஸ்ட் வைரல் வீடியோ இதோ.!!

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் வாரிசு இசை வெளியீட்டு விழாக்காக நேரு உள் விளையாட்டு அரங்கம் தயார் செய்யப்பட்டு வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.