வாரிசு திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலின் வீடியோ வெளியானது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் தளபதி விஜய் அவர்கள் வம்சி இயக்கத்தில் தமிழில் ‘வாரிசு’, தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரில் உருவாகும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகியுள்ளது.

தெலுங்கு இயக்குனர் தில்ராஜ் தயாரிப்பில் தமன் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்கள் இணையதளத்தை தெறிக்க விட்டதை தொடர்ந்து இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் 3rd சிங்கிள் பாடலான “Soul of Varisu ” என்னும் “It’s for you Amma” பாடலின் வீடியோ படக்குழு அறிவித்திருந்தபடி இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. அம்மாவின் அன்பை வெளிப்படுத்தும் இப்பாடலின் வரிகளை விவேக் எழுத பிரபல பின்னணி பாடகி சித்ரா பாடியுள்ளார். இந்தப் பாடலின் லிரிக்ஸ் வீடியோ தற்போது ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

YouTube video