27 நாளில் வாரிசு படத்தின் வசூல் சாதனை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் இவரது நடிப்பில் கடந்த மாதம் 11-ம் தேதி “வாரிசு” திரைப்படம் வெளியானது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வெளியான இப்படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார்.

தமன் இசையில் உருவாகியிருந்த இப்படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, நடிகர் ஷாம், ஜெயசுதா, குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் வசூல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வெளியாகி 27 நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து ரூபாய் 300₹ கோடியை தாண்டி வசூல் செய்திருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை உச்சகட்ட கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.