வாரிசு திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் அவர்கள் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, பிரபு, நடிகர் ஷாம், யோகி பாபு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

வாரிசு படத்தின் 2 வது பாடல்!!… படக்குழு வெளியிட்ட அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்.!

தில் ராஜு தயாரித்து வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இவரது இசையில் அண்மையில் முதல் பாடலாக வெளியான ரஞ்சிதமே பாடல் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

வாரிசு படத்தின் 2 வது பாடல்!!… படக்குழு வெளியிட்ட அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்.!

அதன்படி இப்படத்தின் 2வது பாடலான ‘தீ தளபதி’ பாடல் வரும் டிசம்பர் 4ஆம் தேதியான நாளை மாலை நான்கு மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் அதிக எதிர்பார்ப்புடன் உற்சாகமடைந்த ரசிகர்கள் இத்தகவலை வைரலாக்கி வருகின்றனர்.