Varalaxmi Sarathkumar Social Media Page Issue

வரலட்சுமி சரத்குமார் இன் சோசியல் மீடியா பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த வேலையை பார்த்தது யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Varalaxmi Sarathkumar Social Media Page Issue : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். சரத்குமாரின் மகளான இவர் நாயகி, வில்லி என வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சர்க்கார் திரைப்படத்தின் தளபதி விஜய்க்கு வில்லியாகவும் நடித்திருந்தார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகையான வரலட்சுமி தொடர்ந்து சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

இப்படியான நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வரலட்சுமி சரத்குமாரின் சோசியல் மீடியா பக்கங்கள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது.

இதனை அவர் அறிக்கை ஒன்றின் மூலமாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தார். அதன் பின்னர் அவருடைய சமூக வலைதளப் பக்கங்கள் சரி செய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த நிலையில் தற்போது வரலட்சுமி சரத்குமாரின் சமூக வலைத்தளங்களை ஹேக் செய்தது யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த சில ஸ்கிரீன்ஷாட் ஆதாரங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன‌.

மேலும் இவர் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து ட்வீட் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.