ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜீவா. இவரது நடிப்பில் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் வரலாறு முக்கியம்.

மக்களின் மனதை கவர்ந்து சாதனை படைப்பாரா ஜீவா? வரலாறு முக்கியம் முழு விமர்சனம்.!!

இந்த படத்தில் காஷ்மிரா மற்றும் பிரக்யா ஆகியோர் நடிக்க கே எஸ் ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

படத்தின் கதைக்களம் ;

கோவையில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி அதன் மூலம் வரும் வருமானத்தில் தன்னுடைய அப்பா கே எஸ் ரவிக்குமார் மற்றும் அம்மா சரண்யா பொன்வண்ணன் ஆகியோருடன் வசித்து வருகிறார் ஜீவா.

இவர்கள் வசிக்கும் அதே தெருவுக்கு அக்கா தங்கையான காஷ்மிரா, பிரக்யா வந்து வசிக்க ஜீவா காஷ்மீரா மீது ஒரு தலை காதலுடன் இருக்க பின்னர் இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். ஆனால் காஷ்மீராவின் அப்பா தன்னுடைய மகளை ஒரு துபாய் மாப்பிள்ளைக்கு தான் கொடுப்பேன் என உறுதியாக இருக்க கடைசியில் ஜீவா காஷ்மீரா சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் காமெடி கலந்த கதைக்களம்

படத்தைப் பற்றிய அலசல் : சிவா மனசுல சக்தி படத்துக்கு பிறகு பழைய ஜீவாவை இந்த படத்தில் பார்க்கலாம் என உறுதியாக சொல்லும் அளவுக்கு நடித்து அசத்தியுள்ளார்‌.

மக்களின் மனதை கவர்ந்து சாதனை படைப்பாரா ஜீவா? வரலாறு முக்கியம் முழு விமர்சனம்.!!

விடிவி கணேஷின் காமெடிகள் ரசிக்க வைக்கிறது. கதை பெருசாக இல்லை என்றாலும் காமெடியை வைத்து படம் முழுக்க ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் சந்தோஷ் ராஜன்.

படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.