வரலட்சுமி சரத்குமார் கொரோனாவை உற்சாகத்துடன் டீல் செய்யும் வீடியோ பதிவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் பதிவிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோயினியாக இருப்பவர் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார் இது குறித்த வீடியோ ஒன்றை சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

கொரோனாவை உற்சாகத்துடன் டீல் செய்யும் வரலட்சுமி - வைரலாகும் வீடியோ பதிவு.

அதில் அவர் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தான் மேற்கொண்டிருந்ததாகவும் இருப்பினும் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விட்டது என்றும் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கூறியிருந்தார்.

கொரோனாவை உற்சாகத்துடன் டீல் செய்யும் வரலட்சுமி - வைரலாகும் வீடியோ பதிவு.

தற்போது அவர் கொரோனாவால் தனிமைப்படுத்தி இருக்கும் அறையில் அவரின் செல்ல நாயுடன் செய்யும் அட்டகாசங்களை வீடியோ பதிவாக எடுத்து தான் உற்சாகத்தோடு கொரோனாவை டீல் செய்ய முயற்சிக்கிறேன் என்ற பதிவுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கெட் வெல் சூன் மேம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.