Varagu Paniyaram
Varagu Paniyaram

Varagu Paniyaram :

தேவையான பொருட்கள் :

1. வரகரிசி – கால் கிலோ

2. உளுத்தம் பருப்பு – 100 கிராம்

3. தேங்காய் துருவல் – 1 கப்

4. வாழை பழம் – 1

5. வெல்லம் – 100 கிராம்

6. ஏலக்காய் – 2

7. எண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

வரகரிசி மற்றும் உளுத்தம் பருப்பை சுத்தம் செய்து அதனை 2 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.

பிறகு, வராகரிசி பாதி அரைத்து கொண்டு இருக்கும் போது அதில் உளுத்தம் பருப்பை போட்டு அரைத்து கொள்ள வேண்டும்.

இவை இரண்டும் அரைத்து கொண்டு இருக்கும் போது அதில் தேங்காய் துருவல் ஒரு கப்,வாழை பழம், ஏலக்காய் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

நன்றாக புளித்து விட்ட மாவை,பணியார கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் மாவை ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபுறம் வெந்ததும் தட்டில் மாற்றி பரிமாறினால் சுவையான வரகரிசி பணியாரம் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here