Vantha Rajavathaan Varuven Collection Report
Vantha Rajavathaan Varuven Collection Report

ரூபாய் 35 கோடி பட்ஜெட்டில் வெளியாகி தோல்வியை தழுவிய சிம்புவின் வந்தா ராஜாவாகத் தான் வருவேன் படத்தின் வசூல் நிலவரங்களை பார்க்கலாம் வாங்க.

Vantha Rajavathaan Varuven Collection Report : அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தினால் பெரும் சர்ச்சைக்கு ஆளாகி பின்னர் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் வந்தா ராஜாவா தான் வருவேன்.

OMG.. ஆட்டோகிராப் படத்தில் நடிக்க இருந்தது இவர் தானா.. கற்பனை கூட செய்ய முடியாத உண்மையை போட்டு உடைத்த சேரன்.!

சுந்தர் சி இயக்கிய இந்தப் படத்தின் டைட்டில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தொடர் சர்ச்சைகளுக்கும் அதனால் தன்னை விமர்சித்தவர்களுக்கும் இப்படத்தின் மூலமாக சிம்பு பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இறுதியில் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் மிஞ்சியது ஏமாற்றம் தான். அந்த அளவிற்கு இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வியைத் தழுவியது.

ரூபாய் 35 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தியாவில் ரூபாய் 16 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. ஓவர்சீஸ் நாடுகளில் ரூபாய் 4 கோடி வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் மொத்தமாகவே ரூபாய் 20 கோடி தான் வசூல் செய்துள்ளது. இதனால் படம் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.