VRV Official Teaser

VRV Offical Teaser : சிம்பு நடித்து வரும் வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு. இவர் AAA படத்தால் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி மணிரத்தினம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாக தான் என்ற படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள இந்த படத்தில் மஹத் மற்றொரு ஹீரோவாக நடித்துளளார்.

சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷும், மஹத்துக்கு ஜோடியாக கேத்ரின் தெரசாவும் நடித்துள்ளனர். படத்தின் டீஸர் இன்று வெளியாகும் என லைகா நிறுவனம் நேற்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

அதன்படி தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.