Vanitha With Her Hubby
Vanitha With Her Hubby

வருங்கால கணவருடன் வனிதா முதல் முறையாக புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

Vanitha With Her Hubby : தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். இவர் பழம்பெரும் நடிகரான விஜயகுமார் மற்றும் பழம்பெரும் நடிகையான மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்ட இவர் அதன் பின்னர் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆனார்‌.

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு புதிதாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கி அதில் சமையல் வீடியோ, ப்யூடி டிப்ஸ் ஆகியவற்றை வழங்கி வருகிறார்.

தன்னுடைய ஜோடிக்கு வீடியோ காலில் வாழ்த்து சொன்ன கவின் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

இதை யூட்யூப் சேனல் வீடியோ களை எடுப்பதற்கும் பதிவிடுவதற்கும் உதவியாக இருந்து வரும் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

ஏற்கனவே இரண்டு மகள்களுடன் வசித்து வரும் வனிதா அவர்களின் சம்மதத்துடனும் விருப்பத்துடனும் மூன்றாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

வரும் ஜூன் 27ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முன்னரே இருவரும் தங்களின் கைகளில் பெயர்களை பச்சை குத்தி இருந்தனர்.

View this post on Instagram

Etched for love

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

இந்த நிலையில் தற்போது வனிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீட்டர் பாலுடன் தனது திருமண விழாவிற்கு நண்பர்களை அழைக்க சென்ற போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் நல்ல ஜோடி என கமெண்ட் அடித்து வருகின்றனர். வேலு வனிதாவின் புதிய திருமணத்திற்கு வாழ்த்துக்களும் கூறி வருகின்றனர்.