Vanitha With Archana Photo Trolls

வனிதாவை சந்தித்த புகைப்படத்தை அர்ச்சனா இணையத்தில் வெளியிட ரசிகர்கள் அதிகரித்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Vanitha With Archana Photo Trolls : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா. பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகளான இவர் தொடர்ந்து பல படங்களில் அடுத்து வந்த நிலையில் பின்னே திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திரையுலகில் இருந்து விலகியிருந்தார்.

பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

தற்போதைய வெள்ளித்திரையில் ஹீரோயினியாக சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் இவரை பிக்பாஸ் அர்ச்சனா நேரில் சந்தித்து உள்ளார். இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருவரும் ரேகாவின் யூடியூப் சேனல் துவக்க விழாவில் சந்தித்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரெண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லை என கமெண்ட் அடித்து வருகின்றனர்.