Vanitha Birthday Wishes to Arun Vijay
அருண் விஜயின் பிறந்த நாள் வாழ்த்தில் வனிதா போட்ட கமெண்ட் பலரையும் ஷாக்காகியது மட்டுமில்லாமல் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் வில்லனாக ஹீரோவாக நடித்து பிரபலமானவர் விஜயகுமார். இவரின் மகள் வனிதா விஜயகுமார்.

தற்போது வனிதா குடும்பத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அவர்களிடம் இருந்து விலகியே இருந்து வருகிறார்.

அப்படியான நிலையில் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய அவருடைய அண்ணன் அருண் விஜய்க்கு வனிதா பிறந்த நாள் வாழ்ந்து கூறியுள்ளார்.

சன் டிவி நிறுவனம் அருண் விஜய்க்கு வாழ்த்து கூறி ட்வீட் ஒன்றை பதிவு செய்ய அதில் வனிதா உனக்கு பிடிக்குதோ இல்லையோ ஐ லவ் யூ என கூறி அருண் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்க கிரேட் அக்கா என கூறி வனிதாவை பாராட்டி வருகின்றனர்.

வாழ்த்திய அனைவர்க்கும் நன்றி சொன்ன அருண் விஜய் வனிதாவின் வாழ்த்திற்கு மட்டும் எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்பதை நெட்டிசன்கள் சுட்டி காட்டியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.