Vanitha Vijayakumar

வனிதா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அவரை வா தலைவா என வரவேற்கின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் விஜயகுமார். இவருக்கும் நடிகை மஞ்சுளாவிற்கும் பிறந்தவர் வனிதா விஜயகுமார்.

தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் இணைந்து நடித்திருந்தார். இதனையடுத்து சில படங்களில் நடித்து சினிமாவில் இருந்து விலகி இருந்த வனிதா பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதனையடுத்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வருகிறார்.

இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அங்கு வடிவேலுவுடன் இணைந்து போட்டோ எடுத்து கொண்டுள்ளார். அந்த போட்டோவை தன்னுடைய ட்விட்டரில் வெளியிட ரசிகர்கள் வடிவேலுவை வா தலைவா வா என வரவேற்கின்றனர்.

வடிவேலுவின் அடுத்த இன்னிங்சிற்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.