biggboss editor
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான ஒரு முக்கிய புகைப்படத்தை நடிகை வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ளார்.

vanitha-vijayakumar-with-biggboss-season-3-editors – ஏற்கனவே பிக்பாஸ் தமிழ் முதல் மற்றும் 2வது சீசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது 3வது சீசனும் நடந்து முடிந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு திரைப்படமோ, குறும்படமோ இல்லை தொலைக்காட்சி சீரியலோ, இயக்குனர் எடுத்த காட்சிகளை சரியாக இணைத்து, தேவையில்லாதவற்றை வெட்டித்தள்ளி, சரியான காட்சிகளை சரியான இடத்தில் வைத்து திரைப்படங்கள்/நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யம் கூட்டுவது எடிட்டர்கள் கையில்தான் இருக்கிறது. அதேபோல் தோல்வி அடையும் திரைக்கதை கொண்ட பல திரைப்படங்களை திறமையான எடிட்டர்கள் சில காட்சிகள் மூலமே வெற்றி பெற வைத்த உதாரணங்களும் திரையுலகில் நிறைய இருக்கிறது.

Sakshi Agarwal Crying : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Bigg Boss Promo Update, kamal Haasan, Vijay Television, Reshma, Mugen Rao

அதிலும், பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு எடிட்டர்களின் பங்கு மிகவும் முக்கியம் மற்றும் அவசியமான ஒன்று. இல்லையேல் சுவாராஸ்யம் போய் டி.ஆர்.பி. குறைந்து விடும். பிக்பாஸ் வீட்டில் நடந்த பல சம்பவங்கள் ரசிகர்களுக்கு காட்டப்படவே இல்லை என்பது அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களை கேட்டால் தெரியும். இது அனைத்தும் எடிட்டர்களின் கை காரியம்தான்.

ஏன் சினிமா விழாக்களுக்கு வருவதில்லை? பேட்டி கொடுப்பதில்லை – நயன் ஓப்பன் டாக்

இந்நிலையில், இந்த சீசனில் பிக்பாஸ் சீசனை எடிட் செய்த எடிட்டர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘உங்களத்தான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தோம். நல்ல சம்பவங்கள் பலவற்றை ஏன் நீக்கிட்டீங்க?’ என சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

mugen

மேலும், டைட்டில் யாருக்கு கிடைக்கனும், யாரும் இந்த வாரம் வெளியே போக வேண்டும் என மட்டும் இவங்ககிட்ட சொல்லிட்டா போதும். பக்காவா எடிட் பண்ணி மக்களை குறிப்பிட்ட அந்த போட்டியாளருக்கு எதிரா மக்கள் ஓட்டு போடும்படி செய்து விடுவார்கள். முகேனுக்கு ரொம்ப கஷ்டப்பட்டீங்க போல.. கடைசி வாரம் செம ஹார்ட் வொர்க்’ என கிண்டலடித்துள்ளனர்.