vanitha
என்னுடைய தல, தளபதி, சூப்பர் ஸ்டார் என எல்லாமே இவர் தான் என கூறி வனிதா போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தின் மூலமாக வாரிசு நடிகையான வனிதா. இவர் திரையுலக பிரபலங்களான விஜயகுமார், மஞ்சுளா தம்பதியின் மகளாவார்.

சில படங்களுக்கு நடிப்பதை நிறுத்தி கொண்ட வனிதா உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதலில் வில்லியாகவும் அதன் பின்னர் பாசமுள்ள பெண்மணியாகவும் தாயாகவும் தன்னை வெளிப்படுத்தி கொண்டார்.

மேலும் வனிதா தன்னுடைய மகனுடன் சேர வேண்டும் என்பது தான் தன்னுடைய ஆசை என பலமுறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருப்பார்.

தற்போது இவர் தன்னுடைய மகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு தன்னுடைய தல, தளபதி, சூப்பர் ஸ்டார், உலக நாயகன் என அனைத்தும் இவர் தான் என குறிப்பிடுள்ளார்.

இதோ அந்த புகைப்படத்தையும் ரசிகர்கள் பதிவிடும் கமெண்ட்களையும் நீங்களே பாருங்க