உங்கள் வேலையை நீங்க பாருங்க என்று அட்வைஸ் கொடுத்தவருக்கு வனிதா விஜயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

Vanitha Vijayakumar Reply to Fan : தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமாரின் மகனாக இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

ஒன்றுக்கு மூன்று திருமணம் செய்து கொண்ட இவர் அனைத்தும் விவாகரத்தில் முடிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

உங்க வேலையை நீங்க பாருங்க.. அட்வைஸ் செய்தவருக்கு வனிதா கொடுத்த பதிலடி.!!

இந்த நிலையில் வனிதா விஜயகுமார் வட இந்தியாவை சேர்ந்த பைலட் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியது. ஆனால் அது உண்மையில்லை என வனிதா விளக்கம் அளித்திருந்தார். மேலும் நான் சிங்கிள் எனவும் அவைலபுள் எனவும் கூறி இருந்தார்.

வனிதாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர் ஒருவர் அவைலபுளா? இனியும் இப்படி அசிங்கமா பேசாதீங்க என கூற வனிதா உங்கள் வேலையை நீங்க பாருங்க, எங்களுக்கு பிரச்சினைனா நீங்களா வந்து பார்க்க போறீங்க என்று விமர்சனம் செய்திருந்தார்.

இவருடைய இந்த பதில் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.