Vanitha Vijayakumar Photos

மாலத்தீவில் மல்லாக்க படுத்தபடி புகைப்படம் வெளியிட்டுளளார் நடிகை வனிதா.

Vanitha Vijayakumar Photos : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான விஜயகுமார் மற்றும் நடிகையான மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா விஜயகுமார்.

தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த இவர் அதன் பின்னர் சில படங்களில் நடித்தார்.

குடும்பத்தாருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தான் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்றார்.

அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலையும் வென்றார்.

பின்னர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். மேலும் இவர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இவர் மாலத்தீவு கடற்கரைக்கு சென்று உள்ளார். அங்கு கையில் கிளாஸ் உடன் மல்லாக்க படுத்தபடி எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கையில் என்ன சரக்கா எனவும் கிண்டலடித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதோ பாருங்க