Vanitha About Kasthuri
Vanitha About Kasthuri

கழுத்தில் ரூபாய் நோட்டு மாலையுடன் வனிதா பீட்டர் பால் ஆகியோர் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Vanitha Vijayakumar Photo Viral : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய ஒருவராக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவர் சமீபத்தில் தன்னுடைய யூடியூப் சேனலுக்கு பேருதவியாக இருக்கும் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் மூன்றாவது திருமணம் பெரும் பரபரப்புக்கு உள்ளாகி தற்போது தான் அடங்கியுள்ளது. மேலும் சில வாரங்களுக்கு முன்பு பீட்டர் பால் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி இருந்தார்.

தன்னுடைய கணவர் எந்தவித பிரச்சனையுமின்றி பூரண குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக வனிதா, பீட்டர் பால் ஆகியோர் கழுத்தில் ரூபாய் நோட்டு மாலையுடன் ஸ்ரீ குபேர லட்சுமி பூஜையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தை வனிதா விஜயகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

https://twitter.com/vanithavijayku1/status/1303982843941408768?s=19
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.