Vanitha Vijayakumar Pair With Hari Nadar

புதிய படம் ஒன்றில் வனிதா விஜயகுமார் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

Vanitha Vijayakumar Pair With Hari Nadar : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். பழம்பெரும் நடிகரான இவரின் மகள் தான் வனிதா விஜயகுமார்.

சந்திரலேகா படத்தில் நாயகியாக நடித்த இவர் அதன் பின்னர் சில படங்களில் நடித்தார்.

நீண்ட நாட்களாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்த இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்றார்.

அதன் பின்னர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார். தற்போது கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில் நடமாடும் நகைக்கார மனுஷனான ஹரி நாடார் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த வீடியோவை வனிதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.