Vanitha Vijayakumar Latest Photos

மூன்றாவது திருமணம் நடந்து அதன் பிரிவுக்கு பிறகு மீண்டும் தளதளவென கொஞ்சம் எடை கூடியுள்ளார் வனிதா‌.

Vanitha Vijayakumar Latest Photos : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். இவருடைய மகள் வனிதா. சில படங்களில் நாயகியாக நடித்த இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். மேலும் தனக்கென யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதனை இயக்கி வருகிறார்.

தன்னுடைய யூடியூப் சேனலுக்கு பேருதவியாக இருந்த பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு திருமணம் செய்த வேகத்திலேயே அவர் மதுவுக்கு அடிமையானவர் என கூறி அவரை பிரிந்தார்.

பீட்டர் பாலை பிரிந்த பிறகு மீண்டும் வனிதா தன்னுடைய வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் முன்பைவிட வனிதா சற்று உடல் எடை கூடியுள்ளார்.

தன்னுடைய கழுத்துக்குக் கீழே புதியதாக டாட்டு ஒன்றை குத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ரசிகர்களும் வனிதாவின் புகைப்படம் குறித்து கமெண்ட்களை பதிவுசெய்து வருகின்றனர்.