மீண்டும் சின்னத்திரை சீரியலில் நடிக்க உள்ளார் வனிதா விஜயகுமார்.

Vanitha Vijayakumar in Zee Tamil Serial : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் நடிகையான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகிய தம்பதியரின் மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். சந்திரலேகா என்ற படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து அதன் பிறகு சில படங்களில் நடித்தார்.

திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். பிரசன்னா நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் பவர் ஸ்டாருக்கு ஜோடியாக பிக்கப் டிராப் படத்தில் நடித்துள்ளார்.

வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது எப்படி?

அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சந்திரலேகா என்ற சீரியலில் இவர் கெஸ்ட் ரோலில் நடித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் என்ற சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இனிமேல் அல்லு அர்ஜூன் தமிழில் கலக்குவாரு – Music Director Devi Sri Prasad Speech | Pushpa Press Meet