உடல் எடை குறைந்து ஸ்டைலாக மாறி உள்ளார் வனிதா விஜயகுமார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளான இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தில் மூலம் நாயகியாக அறிமுகமாகி சில படங்களில் நடித்தார்.

மூன்று திருமணம் செய்து திருமண வாழ்க்கை வனிதா விஜயகுமார் கை கொடுக்காத நிலையில் தற்போது தனது மகள்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். அதே சமயம் தனக்கென யூடியூப் சேனல் தொடங்கின அதில் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அசிஸ்டன்ட் கமிஷனர் ஆப் போலீஸ் கேரக்டரில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லி அந்த படத்திற்காக உடல் எடை குறைத்து ஸ்டைலாக மாறி இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.