பிக் பாஸ் வனிதாவுக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் வனிதா.
இவர் தற்போது விஜய் டிவி சீரியலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆம் விஜய் டிவி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வில்லியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் வனிதாவின் காட்சிகள் ஒளிபரப்பாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதுவரை வனிதா இது பற்றி எதையுமே கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.