Vanitha Vijayakumar in Older Getup
Vanitha Vijayakumar in Older Getup

நரைத்த முடியுடன் கிழவியாக மாறியுள்ளார் வனிதா.

Vanitha Vijayakumar in Older Getup : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மூத்த மகளான இவர் தன்னுடைய அப்பா அம்மாவை தரக்குறைவாக பேசி ஆரம்பத்தில் சர்ச்சைக்குரிய நபராக பிரபலமானார்.

அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு அங்கேயும் வத்திக்குச்சி வனிதா என பெயர் எடுத்தார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய நபராக வலம் வரும் இவர் விஜய் டிவி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிகழ்ச்சிக்காக அடிக்கடி வித்தியாச வித்தியாசமான கெட்டப்புகளில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த வகையில் தற்போது நரைத்த முடியுடன் கிழவியாக மாறிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.