சமந்தாவுக்கு போட்டியாக குத்தாட்டம் போட களமிறங்கியுள்ளார் வனிதா விஜயகுமார்.

Vanitha Vijayakumar in Kaathu Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். பழம்பெரும் நடிகரான விஜய குமாரின் மூத்த மகளான இவர் பல்வேறு படங்களில் நடித்த இவர் திருமண சர்ச்சை காரணமாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

மிக மோசமான கட்டத்தில் இருக்கிறோம் : பில்கேட்ஸ் எச்சரிக்கை

நீண்ட இடைவெளிக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் பிரபலமடைந்தார். தற்போது இவர் சினிமாவில் தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்கி பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

நான் பேசுனாலே 1000 பிரச்சனை – Director Pa .Ranjith Bold Speech..! | Writer Movie Press Meet 

இந்த நிலையில் இவர் காத்து என்ற படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். புஷ்பா திரைப்படத்தில் சமந்தா ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனம் ஆடி இருந்த நிலையில் அவருக்கு போட்டியாக களம் இறங்கியுள்ளார் வனிதா விஜயகுமார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.