வட இந்திய பைலட்டை நடிகை வனிதா நான்காவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் தீயாக பரவி வருகிறது.

Vanitha Vijayakumar in 4th Marriage : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். இவருடைய மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த இவர் அதன்பின்னர் ராஜ்கிரண் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

தன்னுடைய 19 வயதிலேயே நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர். அதன்பின்னர் தன்னுடைய காதல் கணவரை பிரிந்த வனிதா ஆந்திராவை சேர்ந்த ஆனந்த் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஒரு மகளை பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் அவரையும் விவாகரத்து செய்தார்.

வட இந்திய பைலட்டை நான்காவது தெரியும் செய்தாரா வனிதா? தீயாக பரவும் பரபரப்பு தகவல்

அதோடு இல்லாமல் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பவரை காதலித்து வந்தார். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக கூறி வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். தன்னுடைய இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்த வனிதா 40 வயதில் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான 4 மாதத்தில் பீட்டர் பால் ஒரு மொடா குடி காரன் எனக் கூறி அவரை வீட்டைவிட்டு வெளியேற்றினார். அவரை முழுவதுமாக பிரிந்துவிட்டதாக வனிதா வீடியோ மூலம் தெரிவித்தார். பீட்டர் பாடல் பிரிந்த வனிதா ஒரு சில மாதங்களில் வட இந்தியாவைச் சேர்ந்த பைலட் ஒருவருடன் காதலில் விழுந்தாகவும் மும்பை சென்றபோது அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மாலத்தீவு சுற்றுலாவுக்கு கூட அவர் நான்காவது காதல் கணவருடன் சென்றதாக பேசப்பட்டு வருகிறது. வனிதா கழுத்தில் அணிந்திருந்த கருப்பு மணி கூட வட இந்திய பைலட் அவரது குடும்ப முறைப்படி கட்டியதுதன் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் வனிதா ஏன் அவரது நான்காவது திருமணத்தை மறைக்கிறார் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்