டாப் சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வனிதா விஜயகுமார்.

Vanitha Vijayakumar Entry in Karthikai deepam Serial : தென்னிந்திய சினிமாவில் தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார்.

இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் திருமணத்திற்கு பிறகு பெரிய அளவில் கவனம் செலுத்தாமல் இருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மீண்டும் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருகிறார்.

அதேபோல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் ஆரம்பத்தில் நடிக்க தொடங்கியவர் தற்போது ஜீ தமிழில் நம்பர் ஒன் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த சீரியலில் கார்த்தியின் கல்யாணம் வைபோகம் தொடங்கியுள்ள நிலையில் அபிராமியின் வீட்டு உறவினராக வனிதா விஜயகுமார் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தெரியவந்துள்ளது.