Vanitha Vijayakumar Childhood Photo
Vanitha Vijayakumar Childhood Photo

நடிகை வனிதா வெளியிட்டுள்ளார் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vanitha Vijayakumar Childhood Photo : தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே.

சொத்துக்காக தன்னுடைய பெற்றோரை எதிர்த்து சண்டை போட்டார். தன்னுடைய பெற்றோரை வனிதா பேட்டிகளில் தரக்குறைவாக பேசியதால் தற்போது அப்பா மற்றும் அப்பாவின் உறவினர்களோடு நெருக்கம் இல்லாமல் இருந்து வருகிறார்.

வனிதாவின் அம்மாவான மஞ்சுளா பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் என் வயித்துல பேய் வந்து பிறந்துட்டா என பேசியதெல்லாம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

எப்பவுமே படம் பண்ணுறதுலே குறியாக இருக்காமல் கொஞ்ச இதையும் பண்ணுங்க! நடிகர் விஜய், ரஜினி, கமல், சூர்யாவுக்கு வனிதா திடீர் ட்வீட்!

இருப்பினும் வனிதா பேட்டி மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் தன்னுடைய அப்பாவை பற்றியும் அம்மாவைப் பற்றியும் பேசி வருகிறார்.

சமீபத்தில் விஜயகுமார் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். திரையுலக பிரபலங்கள் விஜயகுமாரின் குடும்பத்தார் என அனைவரும் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறி இருந்தனர்.

வனிதாவும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் இளம் வயதில் அப்பாவுடன் விளையாடிய புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

அந்த புகைப்படம் சமூக வலைதளப் பக்கங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சிறுவயதில் வனிதா எப்படி இருந்திருக்கிறார் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் பகிர்ந்து வருகின்றனர்.