Vanitha Vijayakumar Character in Andhagun Movie

போலீஸ் அதிகாரிக்கு மனைவியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வனிதா விஜயகுமார்.

Vanitha Vijayakumar Character in Andhagun Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

மேலும் இவர் தற்போது பிரசாந்த் நடிப்பில் உருவாகிவரும் அந்தகன் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் இந்த படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தெரியவந்துள்ளது.

போலீஸ் அதிகாரிக்கு மனைவியான வனிதா - வெளியான தகவல்.!!

சமுத்திரகனி இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகியது. இந்த நிலையில் தற்போது இவர் சமுத்திரகனிக்கு ஜோடியாக தான் நடித்து வருகிறார் என தெரிய வந்துள்ளது.

அந்தகன் படம் மட்டுமல்லாமல் இன்னும் பல படங்களில் வனிதா விஜயகுமார் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.