விஜயை அவர் இவர் என்று எல்லாம் கூப்பிட முடியாது என வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.

Vanitha Vijayakumar About Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் முதல் முறையாக வெளியான திரைப்படம் சந்திரலேகா. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் வனிதா விஜயகுமார்.

என்ன வேணாம் நினைச்சுக்கோங்க.. விஜய்யை அவர் இவர்னு மரியாதையா கூப்பிட முடியாது.. ஏனென்றால்? வனிதா விஜயகுமார் ஓபன் டாக்

இந்த படத்தில் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த இவர் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக சினிமாவை விட்டு கொஞ்சம் விலகி இருந்தார். இதனையடுத்து சின்னத்திரையில் நிகழ்ச்சிகள் மூலமாக மீண்டும் மக்கள் மனதில் இடம் பிடித்து வெள்ளித்திரையில் அடுத்த இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

ஜனவரி 30-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கிறார். இந்த நிலையில் இவர் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார். நான் அன்னைக்கு விஜய் பார்த்ததற்கும் இன்னைக்கு பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு, வியப்பாகவும் இருக்கு. ஆனாலும் அதற்காகவெல்லாம் திடீரென விஜய்யை அவர் இவர் என்றெல்லாம் கூப்பிட முடியாது.

என்ன வேணாம் நினைச்சுக்கோங்க.. விஜய்யை அவர் இவர்னு மரியாதையா கூப்பிட முடியாது.. ஏனென்றால்? வனிதா விஜயகுமார் ஓபன் டாக்

என் ஆரம்பத்தில் எப்படி கூப்பிடுவது அப்படித்தான் கூப்பிடுவேன். எனக்கு அப்படியே பழகி விட்டது. நான் இவ்வாறு பேசுவதை பார்த்து மரியாதைக்குறைவாக பேசுகிறேன் என யாராவது சொன்னாலும் அதில் எனக்கு கவலை இல்லை என கூறியுள்ளார். வெள்ளித் திரைப் படங்களில் நடித்து வருவது போலவே தொடர்ந்து சின்னத்திரை வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வேன் என வனிதா தெரிவித்துள்ளார்.