Vanitha Vijayakumar 3rd Marriage Secrets
Vanitha Vijayakumar 3rd Marriage Secrets

சரியா ஜூன் 27 திருமணம் செய்து கொள்வது ஏன் என வனிதா கண்ணீருடன் கூறியுள்ளார்.

Vanitha Vijayakumar 3rd Marriage Secrets : தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் நடிகையின் மகளான இவர் ஏற்கனவே 2 திருமணம் ஆகி இரண்டும் விவாகரத்து பெற்றார்.

தற்போது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வரும் வனிதா வரும் ஜூன் 27-ம் தேதி மூன்றாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

வனிதா விஜயகுமார் இயக்கி வரும் யூடியூப் சேனலுக்காக பெரிதும் உதவி வரும் பீட்டர் பால் என்பவரை அவர் மணந்து கொள்ள உள்ளார்.

தன்னுடைய மூத்த மகள் ஜோவிகா உங்களுக்கு நிச்சயம் ஒரு துணை தேவை. நாங்கள் திருமணம் செய்து கொண்டு சென்று விட்டால் உங்களை கவனித்துக் கொள்வதற்கு என ஒருவர் தேவை. இல்லையேல் நீங்கள் தனியாக இருக்கிறீர்கள் என்று நாங்கள் கஷ்டப்படுவோம். ஆகையால் நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறினார்.

“நான் செத்துட்டு இருக்கேன்” – மேக்னா ராஜ் உருக்கமான கடிதம்..!

அவர்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக நான் இந்தத் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டேன். தனிமையில் நான் என் அம்மாவுடன் ( ஆர்யாவுடன் ) அமர்ந்து உரையாடிய போது எனக்கு ஆசி வழங்குங்கள் என வேண்டினேன்.

அப்போது என்னுடைய மொபைலில் ஜூன்27-ல் பிளாஷ் ஆனது. உடனே நான் அழுது கொண்டே பீட்டர் பால்க்கு போன் செய்து ஜூன் 27 திருமணம் செய்து கொள்ளலாம் என கூறினேன்.

அதுமட்டுமல்லாமல் ஜூன் 27 என் அம்மா அப்பாவிற்கு திருமண நாள். அன்று குடும்பமே சேர்ந்து அதனை கொண்டாடும். அன்றைய தினத்தில் எங்களது திருமணம் நடந்தால் அவர்களின் ஆசி கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.