Vanitha Third Marriage
Vanitha Third Marriage

வனிதாவுக்கு மூன்றாவது திருமணம் நடைபெற உள்ள நிலையில் மாப்பிள்ளை யார் என்று தெரிய வந்துள்ளது.

Vanitha Third Marriage : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜயகுமார் மற்றும் பிரபல நடிகையான மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகள் வனிதா.

ஏற்கனவே இரண்டு திருமணங்கள் ஆகி விவாகரத்து பெற்ற இவர் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

தன்னுடைய பெற்றோருடன் சொத்து விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வருகிறார்.

மேலும் பிக் பாஸ், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து தற்போது தனக்கென ஒரு யூடியூப் சேனலை தொடங்கி அதில் சமையல், அழகு பராமரிப்பு உள்ளிட்டவைகளை பற்றிய வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.

சட்டை பட்டனை கழட்டி விட்டு ஹாயாக காத்து வாங்கும் வலிமை பட நாயகி, இன்னும் ஒரு பட்டன் கழட்டி இருந்தால் அவ்வளவு தான் – இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்

இந்த யூடியூப் சேனல் வீடியோக்களுக்கு உதவி வருபவர் தான் பீட்டர் பால். திரைத் துறையில் பணியாற்றி வரும் இவரை நான் தற்போது வனிதா மூன்றாவது திருமணம் செய்ய உள்ளார்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் அதன் விதிகளை மீறாமல் வீட்டிலேயே தன்னுடைய நெருங்கிய உறவினர்கள் மத்தியில் வரும் ஜூன் 27ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

மேலும் வனிதா தன்னுடைய இரண்டு மகள்களின் சம்மதத்துடனே மூன்றாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அவர்கள் நிச்சயம் நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.