Vanitha Signed in Arjun Doss Movie

மாஸ்டர் பட நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை வனிதா.

Vanitha Signed in Arjun Doss Movie : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அர்ஜுன் தாஸ். கைதி படத்தில் வில்லனாக நடித்திருந்த இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படத்திலும் இவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. மேலும் அட்லியின் தயாரிப்பில் வெளியான அந்தகாரம் என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது.

இப்படங்களை தொடர்ந்து அர்ஜுன் தாஸ் அடுத்ததாக வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை வனிதா ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் இவர் அனல் காற்று என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் ஹரிநாடார் நடிக்கும் 2கே காதல் அழகானது என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் உருவாகிவரும் அந்தகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த மூன்று திரைப்படங்களை தொடர்ந்து அடுத்ததாக 4-வது படமாக அர்ஜுன் தாஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வனிதா இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.