என்னுடைய ஹீரோ என்னுடைய சூப்பர் ஸ்டார் என தளபதி விஜய் உடனான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் வனிதா.

Vanitha Shares Rare Picture of Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நேற்று தன்னுடைய 47வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனால் ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வந்தனர்.

இவர் தான் என் ஹீரோ, என்னுடைய சூப்பர் ஸ்டார் - வனிதா விஜயகுமார் வெளியிட்ட விஜயின் புகைப்படம்.!!
ஏடிஎம்களில் நூதன கொள்ளை : 19 புகார்கள்..முக்கிய குற்றவாளி கைது..

அதுமட்டுமல்லாமல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

Thalapathy 65 Official First Look | Thalapathy Vijay | Nelson Dilipkumar | Anirudh |HD

நேற்று வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தளபதி விஜயுடன் சந்திரலேக்கா படத்தின் போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விஜய்தான் என்னுடைய ஹீரோ, என்னுடைய சூப்பர் ஸ்டார் என கூறி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்