Vanitha Romance With Peter Paul
Vanitha Romance With Peter Paul

புதிய கணவருடன் மீண்டும் லிப் லாக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் வனிதா விஜயகுமார்.

Vanitha Romance With Peter Paul : தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வனிதா. பழம்பெரும் நடிகரான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர் தொடர்ந்து சில படங்களில் நடித்தார்.

தன்னுடைய குடும்பத்தாருடன் ஏற்பட்ட தகராறு அவர்களுடன் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வருகிறார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனதும் தனக்கென ஒரு யூடியூப் சேனலை தொடங்கினார்.

இதை யூடியூப் சேனலுகாக உதவி வந்த பீட்டர் பால் என்ற இயக்குனரை இரு தினங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன்னரே வனிதாவும் அவரது காதலர் பீட்டரும் செய்துள்ள வேலை – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

திருமணம் முடிந்த கையோடு வனிதாவுக்கு அவரது புதிய கணவர் முத்தமிட்டு இருந்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

இந்த நிலையில் தப்போது வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதே போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் இது எல்லாம் ஏன் பதிவிடுவீர்கள். கேவலமா இருக்கு. இதையெல்லாம் உங்களின் படுக்கையறையோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என விமர்சித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CB-0Ep7D-IU/?igshid=1s2zpcwmd4lbe